“பறையாட்டக் கலை பட்டயப்படிப்பு”
(பாரதியார் பல்கலைகழகத்தின் அங்கீகாரம் பெற்றது)
தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரியில் செயல்படும் கயிலை குருமணி சமுதாய கல்லூரி வழியாக பாரதியார் பல்கலைகழகத்தில் தொலைதூர கல்வி அடிப்படையில் ஓராண்டு பட்டயப்படிப்பு அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.
இதன் வழியாக பறை மாணவர்கள் பட்டயப்படிப்பு முடித்து பறை கலைஞர்கள் ,பயிற்றுநர்களாக தொடர்ந்து இயங்கி வருகின்றனர்.
அனைவரும் இணைந்து பயன்பெறவும் , மேன்படுத்தவும் வேண்டுகிறோம்.
முறைபடுத்தப்பட்ட பறை பாடத்திட்டத்தை பல்வேறு பல்கலைகழகங்களில் அங்கீகாரம் பெறுவதற்கான முயற்சியும் நடைபெற்று வருகிறது.